4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சனி, 28 பிப்ரவரி, 2015


ஆக்லாந்து: கடந்த 4 உலக கோப்பைகளிலும் எந்த ஒரு போட்டியிலும் ஆல்-அவுட் ஆகாத ஆஸ்திரேலியா முதல் முறையாக இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஒரு அபசகுணம் என்பது சரியாக இருக்கும். உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு ஆஸ்திரேலியா. 1987ம் ஆண்டு முதன்முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகின. தொடர் வெற்றிகள் 1999ல் ஆஸ்திரேலியா
மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவே சாம்பியன் ஆனது. தடை போட்ட இந்தியா கடந்த 2011 உலக கோப்பையின்போது அரையிறுதிவரை வந்து இந்தியாவிடம் தோற்று வெளியேறியது ஆஸ்திரேலியா. ஆல்-அவுட் இல்லை 1999 முதல் 2011 உலக கோப்பை அரையிறுதி வரை ஆஸ்திரேலியா 27 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் எந்த போட்டியிலுமே ஆல்-அவுட் ஆகவில்லை. 200 ரன்களுக்கும் கீழே ரன்கள் எடுத்த போட்டிகளில் கூட அனைத்து விக்கெட்டுகளையும் எதிரணி கைப்பற்றவிட்டதில்லை ஆஸ்திரேலியா. குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை அதற்கும் குறைவான ரன்களில் மடக்கிப்போட்டு வந்தது ஆஸ்திரேலியா. முதல் முறை ஆனால், இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 151 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆகியுள்ளது. அதுவும் 32.2 ஓவர்களிலேயே மூட்டை கட்டிவிட்டது ஆஸ்திரேலியா. அந்த அணிக்கு இது மிகப்பெரும் மனரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மிக குறைந்த ஸ்கோர் மேலும் உலக கோப்பையில் 1983க்கு பிறகு ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.

Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Copyright © 2015 ABM News 1st
Distributed By My Blogger Themes | Design By Herdiansyah Hamzah